நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாங்கள் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கினோம் அல்லவா, அமைச்சரவையில் 25 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் என்று. இப்போது 25 அதிகரித்துவிட்டதா? இல்லைத்தானே.
அப்படியொன்றும் தெரியவில்லையே. நாங்கள் கடந்தமுறை அமைச்சர்களை நியமிக்கும்போது தேவையெனில் மேலும் சிலரை நியமிப்பதற்கான ஒரு வெற்றிடத்தை வைத்திருந்தோம். எனினும் நாங்கள் எல்லையை கடக்க மாட்டோம். இதுவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி.
எங்களுக்கு தற்போது பொறுப்புக்கள் அதிகரித்ததன் காரணமாக அதற்காக பணியாற்றவேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. எனவே கடமைகளை பகிந்தளிக்கவேண்டிய தேவை உள்ளது. அதற்காகவே இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு
நடவடிக்கை.
ஏனைய அனைவரையும் பற்றி எங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தோழரைப் பற்றி நன்குதெரியும். முழு அர்ப்பணிப்புடன் தனது கடமையை மேற்கொண்டு வரும் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் அவருக்கு எந்தவொரு மோசடி நடவடிக்கையிலும்
ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை.
அங்கு வேறு ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவே ஜனாதிபதி ஒரு விசாரணை குழுவை நியமித்துள்ளார்-என்றார்.
Leave a comment