முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து தாயும் பிள்ளைகள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த உஷாகரன் மாலினி (வயது 38) என்பவரும் அவருடைய 11 மற்றும் 04 வயதுகளையுடைய பிள்ளைகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் சில பொருட்கள் காணப்பட்டமையை அந்தக் கிராமத்து மக்கள் அவதானித்து பின்னர் கிணற்றினுள் சடலங்களை கண்டிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் சம்மந்தப்பட்டவர்களும் மாவட்ட நீதிபதியும் சடலங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
அதன் பின்னர்,
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.





Leave a comment