வடக்கு மாகாண சபையை இம்முறை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக கைப்பற்றுவது குறித்து கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று கூடி விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடக்கு மாகாணத்தை கைப்பற்றுவது என்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் மாலை 3.00 மணியளவில் இடம்
பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயகப்
போராளிகள் கட்சியின் சி.வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த வருடம் அளவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக
அரசாங்கம் கூறியுள்ள நிலையில், அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு
எவ்வாறு காணப்படுகின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பன தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் இந்தக் கூட்டம் இரண்டு மணித்தியாலம் இடம் பெற்றது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளஅழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதன் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Leave a comment