முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று மீண்டும் உத்தரவிட்டது.
கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வு வேலைகளை சட்டவிரோதமாக கொரிய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதன் மூலம் 262 இலட்சம் ரூபாய் இழப்பை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதனை ராஜித சேனாரத்ன தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Leave a comment