Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் – சஜித் தரப்புக்களுடன் கூட்டணி இல்லை என்கிறது பொதுஜன பெரமுன!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணில் – சஜித் தரப்புக்களுடன் கூட்டணி இல்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே
அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்த கொள்கைகளைக்கொண்ட கட்சிகளாகும்.

இவற்றில் இருந்து பொதுஜன பெரமுன கட்சி முற்றிலும் மாறுபட்ட கட்சியாகும்.

மேற்படி கட்சிகளினதும், எமது கட்சியினதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

எனவே, எந்த சூழ்நிலையிலும் எமது கட்சி, மேற்படி இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது. எமது கட்சியின் பயணம் மக்கள் விரும்பும் வகையில் தனிவழியில் தொடரும்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் கொள்கைகளை ஏற்கும் தரப்பினர் மாத்திரமே எம்முடன் இணைய முடியும்.

கடந்த காலங்களில் எம்முடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கூட்டணி உறவை
தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!

சுமார் 10 கிலோகிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.  இதற்கு அமைய...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது,...