முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் விதிக்கப்பட்ட அவசரகால தடைச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம்17 ஆம் திகதி அன்று போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment