முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குற்ற புலனாய்வுப் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அறியவந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூன் 11ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவரும் நிலையிலேயே ரணில் விக்கிரம சிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment