Home தாயகச் செய்திகள் யாழ்.மருத்துவபீடம் பேருந்து கொள்வனவுக்காக நடத்தும் இசை நிகழ்சிக்கு 30 சதவீத வரிவிலக்கு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்.மருத்துவபீடம் பேருந்து கொள்வனவுக்காக நடத்தும் இசை நிகழ்சிக்கு 30 சதவீத வரிவிலக்கு!

Share
Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்துக்கான பஸ் கொள்வனவுக்கு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு முழுமையான வரி விலக்கு கோரிய நிலையில் 30 சதவீத வரி விலக்கே வழங்க முடியும் என யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் சபை அமர்வு நேற்று மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான பஸ் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் திருவள்ளூவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு முழுமையான வரிவிலக்கு கோரிய கோரிக்கை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தால் யாழ். மாநகர சபையிடம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது 25 சதவீத வரிச்சலுகை வழங்குவது என மாநகர சபை நிதிக் குழுவில் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் சபையில் அனுமதிக்காக விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த இசை நிகழ்ச்சி மருத்துவ பீட மாணவர்களின் வாகனக் கொள்வனவுக்காக இடம்பெறுவதால் இதற்கு 50 சதவீத வரி விலக்கு கொடுக்கலாம் என்ற யோசனை யாழ். மாநகர மேயரால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் உறுப்பினர் ப.தர்சானந் கருத்துத்  தெரிவிக்கையில்,

“இந்த இசை நிகழ்ச்சிக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கத் தேவையில்லை. இசை நிகழ்ச்சிக்கான ஆரம்பக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 25 ரூபா வரை உள்ளது. யாழ். மாநகர சபைக்கான கோரிக்கைக் கடிதத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சிகளைப் பெறுவதற்கான போக்குவரத்துக்காக பஸ் கொள்வனவு எனக் கூறினார்கள். ஆனால், மருத்துவ பீட மாணவர்கள் ஒரு ஊடக சந்திப்பில் பஸ் தங்கள் விரிவுரைகளுக்கும் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றார்கள். எனவே, 25  சதவீத வரி விலக்கை வழங்குவது சரியாக இருக்கும்.” – என்றார்.

சில உறுப்பினர்கள் மாணவர்களுக்கு 50 சதவீத வரி விலக்கை வழங்கலாம் எனவும், 50 சதவீதமான வரி விலக்கை வழங்கக்கூடாது எனவும் தங்கள் விவாதங்களை முன்வைத்தார்கள்.

இதன்பின்னர் உறுப்பினர் சு.கபிலன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் செலவுகள் குறைக்கப்பட்டு சமூக நலனாக மாத்திரம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றதா என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான மேலதிகமான வரிச் சலுகைகளை வழங்கலாம்.” – என்றார்.

பின்னர் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு 30 சதவீத வரி விலக்கு வழங்குவது என நீண்ட விவாதங்களின் பின் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்றுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்குவதாக நிதிக் குழுவில் தீர்மானித்த நிலையில் சபை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

மருத்துவ பீட மாணவர்களின் இசை நிகழ்ச்சிக்கு 30 சதவீத ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு உள்ளூர் திரைப்படத்துக்கு 50 சதவீத வரிவிலக்கு வழங்குவதா என உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், அந்த உள்ளூர் திரைப்படத்தின் 50 சதவீத வரி விலக்கு அண்ணளவாக 12 ஆயிரம் ரூபா எனவும், ஆனால் மருத்துவ பீட மாணவர்களின் இசை நிகழ்ச்சிக்கு 50 சதவீத வரி ஒதுக்கீடு மூன்று இலட்சம் வரை செல்லலாம் எனவும் கூறப்பட்டது.

உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அந்தத் திரைப்படத்துக்கு  50 சதவீத விலைக்கழிவை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், தொடர்ந்து திரைப்படங்களுக்கு வரிச் சலுகை வழங்கினால் சபையில் வருமான இழப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் களியாட்ட நிழ்வுகளுக்கு வரிச் சலுகை வழங்குவது  தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பது எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா – தவிசாளர்கள் கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி மட்டு. மாநகரசபைக் கூட்டத்தில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு...

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை!

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக்...

இந்த அரசாங்கத்துக்கு எதிராக அரச அதிகாரிகள்வெகுவிரைவில் வீதியில் இறங்குவார்கள் என்கிறார் நாமல்!

அரச அதிகாரிகள் இந்த அரசுக்கு எதிராக வெகுவிரைவில் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன...