யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment