யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையில்
29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான விசேட நடவடிக்கையில், 45
போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள், 90 லீற்றர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்களுடன் இந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்
பட்டுள்ளனர் என்றும் பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a comment