யாழ்ப்பாணம் – தாவடியில் மதுபானசாலை முன்பாக இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த குறித்த நபர் சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Leave a comment