முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார்.
சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 2:00 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஒரு நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment