யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 88 ஆக உயர்வடைந்துள்ளது. அவற்றில் இதுவரை 76 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்றிலிருந்து இரும்புகள் என நம்பப்படும் ஒரு தொகுதி திண்மத் தொகுதிகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட சிறு போத்தல் ஒன்றும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.



Leave a comment