Home தாயகச் செய்திகள் முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை – அரசாங்கம்!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை – அரசாங்கம்!

Share
Share

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது, குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள், கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

துப்பாக்கிச் சூடுகளால் இவ்வருடம் இதுவரை 44 பேர் மரணம்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார்...

விமலை இன்று3 மணிநேரம் துருவிய சி.ஐ.டி.!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்...

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் காலமானார்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சத்திர சிகிச்சை...