Home தாயகச் செய்திகள் மிரட்டி கப்பம் பெற முயன்ற இருவருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மிரட்டி கப்பம் பெற முயன்ற இருவருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

Share
Share

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான இளைஞர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புன்னைச்சோலை பகுதியிலுள்ள ஒருவரின் சமூக வலைதளங்களில் ஊடுறுவிய குறித்த இரண்டு இளைஞர்களும், அவற்றை தவறாக சித்தரித்து பகிரவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு செய்யாதிருப்பதற்கு 70 ஆயிரம் ரூபாய் கப்பம் வழங்க வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கப்பம் வழங்குவதாக தெரிவித்து, குறித்த இருவரையும் வரவழைத்த, பாதிக்கப்பட்டவர், அவர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

புன்னைச்சோலை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 24 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உயர்தர மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மன அழுத்தம்!

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு...

2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த...

காணிகளை ஒப்படைத்தனர் கோப்பாய் பொலிஸார்! யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்!

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால்கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது....

வடக்கு மாகாண சபை; வரதாஜப் பெருமாள் தலைமையில் யாழில் கூட்டம்!

வடக்கு மாகாண சபையை இம்முறை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக கைப்பற்றுவது குறித்து கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில்...