மாங்குளத்தில் புகையிரத பாதைக்கு அருகே ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு
கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – மாங்குளம் – பனிக்கன்குளம் பகுதியில் இந்தச் சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு
பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment