Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – அநுர அரசிடம் சஜித் அணி வலியுறுத்து!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – அநுர அரசிடம் சஜித் அணி வலியுறுத்து!

Share
Share

“மாகாண சபை முறைமை என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அந்தத் தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணியை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

மக்கள் பிரதிநிதிகளின் வேலையை அரச அதிகாரிகள் செய்ய முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியா மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசு பின்வாங்குகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுகின்றோம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய ஒரு வாய்ப்புதான் மாகாண சபை முறைமையாகும். எனவே, வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...