கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டவேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டனர்.
நாட்டிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அவசர மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன.
வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட எந்த சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் பெருமளவான மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
Leave a comment