Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு!

Share
Share

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 22 ஆவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணிகள் இன்று மதியம் 12.30 வரை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, புதிதாக எலும்புக்கூடுகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதன்படி,

ஏற்கனவே – கண்டுபிடிக்கப்பட்ட 05 எலும்புக்கூடுகள் தொகுதிகள் மாத்திரம் இன்றைய தினம் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கண்டுபிடிக்கப்பட்ட 101 மனித எலும்புக்கூடுகளில், 95 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில், சில எலும்புக்கூடுகள் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை மேலதிக நடவடிக்கைக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்தநிலையில், இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகள் இன்று மதியத்துடன், நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் நாளைய தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...