அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகள் இன்று திங்கட்கிழமை
ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட இரு மனிதப் புதைகுழிகளில் தற்போது அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புதைகுழிகளில் இன்றுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
120 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,
இந்தப் புதைகுழிகளின் அருகே வேறு மனிதப் புதைகுழிகள் இருக்கின்றனவா என்று ஆராய ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, இந்த இரு மனிதப் புதைகுழிகளிலும் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மக்கள் அடையாளம் காணும் விதமாகவே இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment