செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச் செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விடுத்த அழைப்புக்கிணங்க காந்தி பூங்காவில் இன்று காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் மற்றும் பிரதேச சபை சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Leave a comment