மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம் எனறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களளிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசு முற்படுகின்றது.
ஆரம்பத்தில் ராஜபக்ஷக்களைக் கள்வர்கள் என்றார்கள், அதன்பின்னர் 225 பெரும் கள்வர்கள் என்றார்கள், தற்போது ஒட்டுமொத்த அரச ஊழியர்களையும் கள்வர்கள் என்கிறார்கள்.
வைத்தியர்களுக்கும் இன்று அதே பட்டம் சூடப்பட்டுள்ளது. அடுத்து சட்டத்தரணிகள் இலக்கு வைக்கப்படுவார்கள். இறுதியில் வாக்களித்தே மக்களை அடக்கி ஆள முற்படுவார்கள்.
நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. எனினும், அரச அதிகாரிகள்மீது பழிபோட்டுவிட்டு தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு அரசு முற்படுகின்றது. மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம்.
நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசு வீழ்த்தியுள்ளது. இதைப் பற்றி கதைப்பது இனவாத்தைத் தூண்டும் செயல் என்ற விம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.
Leave a comment