Home தாயகச் செய்திகள் போலி ஆவணம் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போலி ஆவணம் தொடர்பில் பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை!

Share
Share

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த ஆவணம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆவணத்தை போலியாக தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த சந்தேக நபர்களை கண்டறிய கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இது போன்ற போலியாக பகிரப்படும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிஸாருடன் தொடர்டைய உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன என்பதை பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் மாலை ஆணொருவரின்...

மனிதப் புதைகுழி; இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு!

அரியாலை மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தன....

மன்னாரில் சிறுமி வன்புணர்வு சகோதரர்களுக்கு 7 வருட சிறை!

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை – அதற்கு உதவியமைக்காக சகோதரர்கள் இருவருக்கு 7 வருடங்கள்...

ஒரு புறம் கொலை! மறுபுறம் மிரட்டல்!! – அரசைக் கடுமையாகச் சாடுகின்றார் சஜித்

“நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து...