Home தாயகச் செய்திகள் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

Share
Share

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ்த் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்தப் பாய்ச்சல்களையும் இந்த அரசு செய்யவில்லை.

இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களைச் செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்த் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது – பிரதமர் ஹரிணி!

பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை...

தேடப்பட்டுவரும் செவ்வந்தியின் தாய் சிறையில் மரணம்!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...