தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் இன்று முற்பகல் நடைபெற்றன.
இறுதி நிகழ்வில் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியிருந்த அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், அவர் இறுதியாக கற்பித்த வட்டக்கச்சி இராநாதபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.
வணக்க நிகழ்வின் பின்னர் அவரின் புகழுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தொடர்பு பட்ட செய்தி (போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!)




Leave a comment