போதைப் பொருட்களுடன் 17 வயது சிறுவன் உட்பட 23 பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று
ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும் 9 பேர் போதை மாத்திரைகளுடனும் 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர்.
போதை மாத்திரைகளுடன் கைதானவர்களில் ஒருவர் 17 வயதுடைய சிறுவன் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment