Home தாயகச் செய்திகள் போதைப்பொருள் கடத்தல்; மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்; மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!

Share
WIDE SHOT two pairs of Black and Caucasian male hands resting on prison cell bars
Share

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஐஸ் போதைப் பொருளை ஏற்றிச் சென்றபோது பொலிஸாரால் மன்னார் எழுத்தூர் சந்திக்கு அருகில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்குத் தொடுநரால் பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதன்படி, இந்த தண்டனை பிரதிவாதிக்கு விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு – அரச அதிபர்கள் குற்றச்சாட்டு!

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது என மாவட்ட செயலாளர்கள்...