போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை என்றும்
அவர் குறிப்பிட்டார்.
இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கடெட அதிகாரிகளை, விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில், நேற்று காலை, சீனக்குடா விமானப்படை கல்விப் பீடத்தில் இடம்பெற்ற விழாவில், இவ்வாறு குறிப்பிட்டார்.
‘சுரகிமு லகபர’ என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப் படையின் 3 ஆவது சமுத்திர படைப் பிரிவு,
தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டு வரும் உயர்ந்த சேவை, செயற்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.
இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப் படையின் உறுப்பினர்களாக, விமானப் படையில் இணைந்த 66 ஆவது, 67 ஆவது மற்றும் 68 ஆவது கடேட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி
செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103 ஆவது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு, பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன, முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
தாய்நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பு உங்களைச்சார்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்.
இது ஒரு தனித்துவமான மற்றும் ஈடுசெய்ய முடியாத பொறுப்பாகும். நமது தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உயர்ந்த பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் பிணைப்பும் எங்களுக்கு உள்ளது.
நமது கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்.
இன்று நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்புகளில், நாடென்றவகையில் நமது கடற்கரையின் எல்லைகளைக் கண்காணித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்வது
மிகவும் முக்கியம் என நான் நம்புகிறேன்.
ஏனென்றால், நமது கடல் எல்லை ஊடாக குறிப்பாக சட்டவிரோத குடியற்றவாசிகள், சட்டவிரோத பொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் அண்மைக் காலத்தில் ஆயுதங்கள் கூட நாட்டிற்குள் எடுத்துவரப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம்.
எனவே, கடல் எல்லையைப் பாதுகாப்பது என்பது, தாய்நாட்டின் மற்றும் தாய்நாட்டில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையாகும் – என்றார்.
Leave a comment