Home தென்னிலங்கைச் செய்திகள் பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!

Share
Share

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷாடிகா லக்ஷானி என்பவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி கடந்த 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறுமாம் – இப்படி பிரதி அமைச்சர் உறுதி!

“மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின் கீழ் அந்தத் தேர்தல் நடத்தப்படும்.” இவ்வாறு...

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!

“தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே,...

பகிடிவதை; கிழக்குப் பல்கலையில் மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேர் கைது!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள...

சிறுவர்களை பணிக்கமர்த்தல்; தண்டனை அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

1956 ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பெண்கள், இளைஞர்கள் மற்றும் 16வயதுக்குக் குறைந்த...