காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று (09) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 29 மொபைல்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சிறைச்சாலை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, முன்னணி பாதாள உலகக் கும்பல் குற்றவாளிகளான ‘தெமட்டகொட சமிந்த’, ‘வெலே சுதா’ மற்றும் ‘மிடிகம ருவான்’ உள்ளிட்ட பல கைதிகளிடமிருந்து இந்த சாதனங்கள் மீட்கப்பட்டன.
சோதனையின் போது, மெபைல்களுக்கு மேலதிமகமாக சிறைச்சாலை அதிகாரிகள் 30 சிம் கார்டுகள், 35 மின்னேற்றிகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.
உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் கடத்தப்பட்ட பொருட்கள் எவ்வாறு கடத்தப்பட்டன என்பதைக் கண்டறிய அதிகாரிகள் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிறைச்சாலைகளுக்குள் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
Leave a comment