கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புளியம்பொக்கணை துவரை
ஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிந்து 110 லீற்றர் கசிப்பும், 524 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Leave a comment