Home தாயகச் செய்திகள் புலமைப்பரிசில் பரீட்சை இன்று!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

Share
Share

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

இம்முறை சிங்கள மொழி மூலம் 231 637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76 313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 307 951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில் தீவுகளில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் தேவை ஏற்படும் பட்சத்தில் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். தடையற்ற மின் விநியோகம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும்.

முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும்.

12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும். பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும்.

கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள்...

கிளிநொச்சியில் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் கொலை!

கிளிநொச்சியில் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளது அமைச்சரவை – தலதா அத்துகோரல தெரிவிப்பு!

சுப்ரீம்செட் திட்டத்தின் முதலீடு குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் அமைச்சரவை தமது கூட்டுப் பொறுப்பைப் பராமரிக்கத்...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து மனுத் தாக்கல்!

கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின்சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு...