Home தாயகச் செய்திகள் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!

Share
Share

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ரி – 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் மேற்படி நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்தார் என்று பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

குரங்கு கடித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆறு பேருக்கு காயம்!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேச குடிமனைப் பகுதிக்குள் உள்நுழைந்த குரங்குக் கூட்டம்  பெண்கள் மீது கடித்ததில் 6...

பால் போத்தலுடன் எட்டு எலும்புக் கூடுகள் இன்று மீட்பு! அவற்றில் பல சிறார்களுடையவை!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இன்று...

வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரியை மாற்றக் கோரி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோரி, இன்றைய...

பதவி விலகுகிறார் கிதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கிதா கோபிநாத் பதவி...