இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்துப் பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.
இதனையடுத்துப் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரைப் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிந்துரைத்து அரசமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.
இந்தநிலையிலேயே பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Leave a comment