இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசமைப்புச் சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரைப் பரிந்துரைத்து அதை அரசமைப்பு சபைக்குச் சமர்ப்பித்திருந்தார்.
அதன்படி, நேற்று கூடிய அரசமைப்பு சபையால் ஜனாதிபதியின் பரிந்துரை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
Leave a comment