Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய அரசமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்: வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் – அநுர அரசு திட்டவட்டம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய அரசமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம்: வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் – அநுர அரசு திட்டவட்டம்!

Share
Share

புதிய அரசமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22 உறுதிமொழிகளில் இதுவரை ஒன்றுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றும் என நம்ப முடியுமா?
புதிய அரசமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியும் அவதானம் செலுத்தப்படுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களுக்குப் பல உறுதிமொழிகளை வழங்கினோம். அவற்றில் சிலவற்றைத் தேர்வு செய்து, அதில் இத்தனைதான் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறுவது அநீதியாகும்.

நாம் வழங்கிய மொத்த உறுதிமொழிகளை ஒப்பிட்டு, அவற்றுள் நிறைவேற்றப்பட்டுள்ளவை எவை என்றே பார்க்க வேண்டும். இலக்கம் முக்கியம் அல்ல. எமது பயணம் எதை நோக்கி, எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது என்பதே முக்கியம்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் நாம் செயற்பட்டு வருகின்றோம். இது மக்களுக்கும் தெரியும். அதேபோல் உறுதிமொழிகளை மீறிப் பயணிப்போமானால் அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பார்கள்.

புதிய அரசமைப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. தேர்தல் முறைமை மாற்றம் உட்பட பல மாற்றங்கள் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெறும். சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகரித்தால் புதிய அரசமைப்பு அமுலுக்கு வரும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள்....

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது – அவர்களுக்குத் தண்டனை உறுதி என்கிறார் அமைச்சர் பிமல்!

“கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் – ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட...

இளம் யுவதி வெட்டிக்கொலை – தென்னிலங்கையில் கொடூரம்!

இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில்...