Home தாயகச் செய்திகள் புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Share
Share

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மீது சரமாரியாக கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட நபரைப் பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தாக்குதலாளி தப்பிச் சென்றுள்ளார்

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் வலியுறுத்து!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

முரண்பாடு, பிளவு அரசுக்குள் இல்லை சஜித்தும் நாமலும் பகல் கனவு காணாதீர்கள் – நளிந்த!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை....

ராஜிதவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று...

இலங்கையில் இருந்து தனியொரு பெண்படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து தனியொரு பெண் நேற்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி...