யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .
குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ஒன்றும், ஆடையை ஒத்த சில துணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..
இன்றைய கண்டுபிடிப்புகளுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment