பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் வைத்து கல்வியை அளவிடும் முறைமை மிகவும் தவறானது எனவும், அந்த முறைமை மாற்றப்பட வேண்டுமெனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து தரப்பினரும் கல்வி குறித்து குறுகிய பார்வையைக் கொண்டிருப்பதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறைமையினை மாற்றுவதன் மூலம், மாணவர்கள் தங்களது திறமைகளுடன் முன்னேறுவதற்கு உதவும் கல்வி முறைமையினை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், படைப்பாற்றல் மற்றும் மனிதாபிமானம் கொண்ட சிறுவர்களை வளர்ப்பதே தங்களது நோக்கமாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.
Leave a comment