சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கிதா கோபிநாத் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.
அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதுடன், பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று அறிவித்துள்ளார்.
கோபிநாத் 2019 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக இணைந்தார்.
கடந்த, ஜூன் மாதம் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் கிதா கோபிநாத் இலங்கைக்குப் பயணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment