மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளனர் என்றும் அதில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மாணவர்கள் 09 பேர் மாணவிகள் 07 பேர் உட்பட்ட 16 பேரை நேற்று புதன்கிழமை (03) மாலை சிஐடியினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் 3 ம் ஆண்டில் தொழில்நுபட்ப பீடத்தில் கல்விகற்றுவரும் மாணவ குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் மாணவிகள் மீது கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை மேற்கொண்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பகிடிவதையால் பாதிக்கப்பட்ட ஹிம்புட்டான அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன்மீது கொடூரமாக தாக்கப்பட்டு பகிடிவதை மேற்கொண்டதாகவும் ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும் 3ம் ஆண்டு மாணவர்குழுவுக்கு எதிராக 26.10.2024 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த முறைப்பாட்டையடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் குழு ஒன்று சம்பவதினமான நேற்று காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு மாணவர்கள் 16 பேரையும் அழைத்து அங்கு வைத்து விசார ணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்ற பின்னர் மாலை 4.45 மணிக்கு 1998 ஆம் ஆண்டு 20 ஆம் எண் கல்வி நிறுவனங்களில் சோதனை மற்றும் பிற வகையான வன்முறைகள் (தடை) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதில் மாணவர்கள் 09 பேர், மாணவிகள் 07 பேர் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Leave a comment