Home தாயகச் செய்திகள் நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஒருவர் மட்டக்களப்பில் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஒருவர் மட்டக்களப்பில் கைது!

Share
Share

மட்டக்களப்பில் இருவரிடம் தான் விசேட குற்ற விசாரணை பிரிவு சிஐடி என கூறி ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலி சிஐடியை ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செயற்பட்டு வந்தவர் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி தான் விசேட குற்ற விசாரணைப் பிரிவு சிஐடி , எனவே குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று வருவதாகவும் உடன் இந்த பணத்தை வாங்கி தர முடியும் அதற்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலியான சிஐடி யிடம் ஒருவர் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபாய் உட்பட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (7) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து செவ்வாய்க்கிழமை அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!

2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

நவாலியில் 147 பேர் படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு 30 வீதம் வரி அறிவித்தார் ட்ரம்ப்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்! – ஆடைகள், பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...