நாட்டின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது. அடுத்த 3 ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைமையை விஞ்சிவிடும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
நெருக்கடியின் உச்சத்தில், பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக பெறுபேறுகளை தருகின்றன என்று ‘சனல் நியூஸ் ஆசியா’வுக்குஅளித்த பேட்டியில் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
‘ஒரு நாடு ஒரு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க அதேநிலைக்குத் திரும்ப 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். எங்கள் விசயத்தில், 3 ஆண்டுகளுக்குள், நாங்கள் கிட்டத்தட்ட அங்கு சென்றுவிட்டோம்,’ என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமை குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வருமானம், வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும். அதாவது, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும்’, என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
Leave a comment