நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு அண்மையாக வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு நல்லூர் ஆலயம் அருகே நின்றிருந்த நால்வர் மீது
வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், இருவர் சிகிச்சைக் காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலை நடத்தினர் என்று சந்தேகிக்கப்படும் ஐவரையும் ஆலயத்தின் அருகே கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் நேற் றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்பாக முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர், ஐவரை யும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Leave a comment