தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசபந்து தென்னக்கோனைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்தக் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
அதற்கமைய தேசபந்து தென்னக்கோனைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசமைப்பு சபை பொலிஸ்மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி ஒருவரைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஒப்புதலின் அடிப்படையில் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார்.
Leave a comment