Home தென்னிலங்கைச் செய்திகள் தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு இருவர் சாவு; மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு இருவர் சாவு; மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

Share
Share

கொழும்பு, பொரளையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 5 இளைஞர்களில் இருவர் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை, சஹஸ்புர சிறிசர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

நேற்று இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இளைஞர்கள் குழுவை குறிவைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ரி – 56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுச் சந்தேகநபர்கள்  மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த 5 இளைஞர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் களனியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், கொழும்பைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 21, 23 வயதுடைய 3 இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

“துப்பாக்கிச்சூடு ‘குடு துமிந்த’ கும்பலால் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘குடு சத்து’வின் சகோதரர் ஒருவர், நேற்று இரவு சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல், டுபாயில் தலைமறைவாக உள்ள இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் எனப் சந்தேகிக்கின்றோம்.” – என்றனர்.

பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய பதவி ஏற்பு!

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை...

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாண சபைத்...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப் படையின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு...

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு  நாம் சதி செய்யவில்லை – எதிரணி தெரிவிப்பு!

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை” – என்று...