தாவடியில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை வீதியில் தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே தர்க்கம் ஒன்றில் இருவர் ஈடு பட்டனர். இதன்போது, மதுபோதையில் இருந்தவர் மற்றவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் யாழ். போதனா மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மானிப்பாயைச் சேர்ந்த நே. சர்வேந்திரன் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேக நபரை மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.
அத்துடன், அவரிடம் விசாரணைகள் மேற் கொண்டு வருகின்றனர்
Leave a comment