வடக்கு, கிழக்கில் ஆயுதப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுதப் போரால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் அங்கவீனமடைந்துள்ளனர். எனவே, ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அந்த நீதியை எதிர்பார்த்தே தேசிய மக்கள் சக்தி அரசுக்குத் தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசின் முக்கிய பொறுப்பாகும்.” – என்றார்.
Leave a comment