தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தயாரிக்கவுள்ளன. இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் க.பிறேமச்சந்திரனுடன் நேற்று இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் நேற்றைய தினம் யாழ். நகரின் விருந்தினர் விடுதியில் சந்தித்துப் பேசின.
இதன் முடிவில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அதில்,
சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு,
மேலும், மாகாண சபைகள் தேர்தல் முறைமை மறு சீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. ஆகவே, தற்போதிருக்கும் முறையில் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
இது, சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபடப் போகிறது. இதன்போது, தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.
தமிழ் தேசத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஓர் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது.
பலர் அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு
நேரடியாகவும் இதுதான், தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் ஏற்கனவே பல வரைவுகள்- யோசனைகள் – ஆவணங்கள் இருந்தாலும்
அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம்.
வெகுவிரைவில் அதனைப் பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள்
நிலைப்பாடுகள் தெரியப்படுத்தினால் நல்லது. மாகாண சபைகள் தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள்
இயங்காமல் இருப்பது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் தேசிய பிரச்னைக்கு தீர்வாகவே மாகாண சபைகள் – முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல – நாங்கள் ஏற்றுக் கொண்ட
தீர்வும் அல்ல.
அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு – எட்டு வருடங்களாக அது இயங்காமல்
இருந்தது. அது அரசமைப்புக்கு உட்பட்ட விடயம். ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருடகாலத்துக்குள்ளே மாகாண சபைகள் தேர்தலை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.
அப்படியிருந்தும்கூட இப்போது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபைகள் தேர்தலை வைப்பதற்கான
அறிகுறி கிடையாது.
அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இழுத்தடிப்பை விட்டு
மாகாண சபைகள் தேர்தல் இருக்கின்ற முறையிலேயே நடத்தப்பட வேண்டும் – என்றார்.
Leave a comment