Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்கு முறையைக் கண்டித்துப் போராட்டம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்கு முறையைக் கண்டித்துப் போராட்டம்!

Share
Share

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்து நாடாளுமன்றச் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்று முற்பகல் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்தன.

முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். இதனைக் கண்டித்தும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிளிநொச்சியில் அதிகாலை விபத்து! இருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற...

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு...

மயிலிட்டியில் நிற்கும் 62 இந்தியப் படகுகளும் அள்ளிச் சென்று அச்சுவேலியில் கொட்டப்படும்!

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடைமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்...

போக்குவரத்து சபை சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த...